கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!
.திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!
ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.
"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''
இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.
"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''
தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம்
சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.
"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே'
'
இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்
.
"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''
÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக