புதன், 26 பிப்ரவரி, 2014

தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்?

சைவ சமயத்தில் அறிவுச்சுரங்கமாக கருதப்படுபவர் தட்சிணாமூர்த்தி. இவர் ஞானத்தின் வெளிப்பாடாக கருதப்படும் அவதாரம். சரஸ்வதிக்கு அடுத்தபடியாக ஓலைச் சுவடியுடன் காட்சி தருபவரும் இவரே.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனது கட்டுக்குள் வரும். தன்னை வழிபடுபவரின் சிந்தனையை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு வழிநடத்திச் செல்லும் வலிமை இவருக்கு உண்டு.
வாழ்வில் எது நிலைக்கும், எது நிலைக்காதது என்பதை உணர்த்தக் கூடியவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறான பாதைக்கு செல்பவர்கள் இவரை வழிபட்டால் ஒழுக்கமான நல்வாழ்வைப் பெறலாம். இவரை வழிபடத் துவங்கினால் வாழ்வில் அமைதி ஏற்படும்.
குரு பகவானுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை, குருவுக்கான நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் நாள்தோறும் வரும் குரு ஓரையிலும் (ஒரு நாளில் அந்த ஒரு மணி நேரம்) தட்சிணாமூர்த்தியை வழிபட உகந்த காலங்களாகும்.
இவரை வழிபடுவதன் மூலம் சந்தான பாக்கியம் பெறலாம். குழந்தைகளின் படிப்பிலும், அறிவுக்கூர்மையிலும் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கொண்டைக்கடலையை மாலையாக அணிவித்தும், வெள்ளை நிற மலர்களான முல்லை, மல்லிகை மலர்களால் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை அறியலாம்.
காளஹஸ்தி போன்ற பிரபல கோயில்களில் தட்சிணாமூர்த்தியை இறுதியாக வழிபடுவது ஏன்?
தட்சிணாமூர்த்தி சிவனுடைய ஒரு அவதாரம். மூலவரை சேவித்த பின்னரே அவரது மறுவடிவமான அவதாரங்களை வழிபட வேண்டும்.
பணம், புகழ், செல்வாக்கு போன்ற அனைத்தையும் வழங்கக் கூடியவர் சிவன். இவரது அவதாரமான தட்சிணாமூர்த்தி ஞானம், அறிவுச் செல்வத்தை அளிப்பவர்.
பணம், புகழ் என அனைத்தையும் பெறுபவர்கள் அதனை முறையாக பராமரிக்க முடியாமல் இழப்பதும் உண்டு. அதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, ஞானத்தை வழங்கும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
இதன் காரணமாகவே மூலவரை (சிவன்) வழிபட்ட பின்னர் அவரது அவதாரங்களை வழங்க வேண்டும் என்ற வகையில் பிரபல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சல்லிப்பிள்ளையார் புதிய சித்திர தேர் வெள்ளோட்டம்


விஜய வருடம் மாசி திங்கள் 1ம் நாள்(13.02.2014) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பொலிகண்டி சல்லிப்பிள்ளையார்ஆலயத்துக்கான புதிய தேரின் வெள்ளோட்ட விழா நடைபெற்றது..காணொளி.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

கௌசல்யா தேவி சோகம்


கௌசல்யா தேவி சோக மிகுதியினால் தசரதரிடம் ‘எனக்கு நீங்களும் இல்லை. என் மகனையும் காட்டிற்கு அனுப்பி விட்டீர்கள். எல்லோரையும் நிர்கதி ஆக்கி விட்டீர்கள்’ என்று சொல்கிறாள். தசரதர் ‘எதிரியிடமும் கருணை செய்யும் இயல்பு கொண்ட நீ மிகவும் துக்கத்தில் இருக்கும் உன் கணவனான என்னிடம் கருணை செய்.’ என்று கைகூப்பி வேண்டுகிறார். கௌசல்யை தரையில் விழுந்து வணங்கி ‘கணவனை கெஞ்ச விடும் பெண் நரகத்தை அடைவாள். சோகத்தால் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இதைச் செய்தீர்கள் என்று அறிவேன். என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று சமாதானம் செய்கிறாள்.
 

வால்மீகி ராமாயணம் என்னும் தேன்


தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.

nilavarai.net