பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் ஒருவர்.[1] விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாளும் அறியப் பெறுகிறார்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றினைந்தது. [2]பொருளடக்கம் [மறை]
1 சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள் 1.1 விநாயகரின் வேறு பெயர்கள்
2 தோற்றம்
3 காணபத்தியம்
4 வரலாறு
5 திருவுருவ விளக்கம் 5.1 திருவடி
5.2 பெருவயிறு
5.3 ஐந்துகரங்கள்
5.4 கொம்புகள்
5.5 தாழ்செவி
6 விநாயகர் மூர்த்தங்கள்
7 முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்=
8 விநாயக சதுர்த்தி
9 தமிழ் நாட்டின் சிறப்பு
10 மேலும் பார்க்க
11 வெளி இணைப்புகள்
12 அடிக்குறிப்பு
சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]
தொடர்பான கட்டுரை
இந்து சமயம்
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல்
வைணவம் வலைவாசல்
பா · உ · தொ
இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[3] [4], யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
விநாயகரின் வேறு பெயர்கள்[தொகு]
வித்தியாசமான விநாயகர் சிலைபிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது சைவ சமயத்தினரின் ஆழ்ந்த நம்பிக்கை. இதை வைணவர்களும் மறுப்பதில்லை.
தோற்றம்[தொகு]
விநாயகரின் தோற்றம் பற்றி பல்வேறு கதைகள் இந்து தொன்மவியலில் உள்ளன. சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து இன்பமாக இருந்து விநாயகரை பெற்றெடுத்தனர் என மகாபுராணங்களில் ஒன்றான இலிங்க புராணம் கூறுகிறது. [5]
சிவபெருமான் பார்வதி தேவியாரின் திருமணத்திற்கு பிறகு கையிலையில் அமர்ந்திருந்தனர். அங்குவந்த தேவர்கள் தாங்கள் தொடங்கும் எந்த காரியமும் சரியாக முடிவதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். அதற்காக தேவர்களுக்கு அனுகிரகம் வழங்குவதாக சிவபெருமான் கூறினார். அத்தினம் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் யானைகளாக ரூபம் கொண்டு கையிலையின் காடுகளில் இங்கும் அங்கும் மகிழ்வாக இருந்தனர். அவர்களுக்கு யானை முகம் மனித உடலும் உடைய ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை எடுத்து மகிழ்ந்தார் பார்வதி தேவி. அக்குழந்தை தாயின் மடிவிட்டு இறங்கி கைகொட்டி தாண்டவம் ஆடியது. ஐந்து கைகளை உடைய குழந்தை என்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டார்.
கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
காணபத்தியம்[தொகு]
இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே ஆகும்.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.
வரலாறு[தொகு]
சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டுவந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இதற்கு வாதாபி கணபதி என்று பெயர். [6]
திருவுருவ விளக்கம்[தொகு]
திருவடி[தொகு]
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு[தொகு]
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்[தொகு]
கொம்புகள்[தொகு]
தாழ்செவி[தொகு]
விநாயகர் மூர்த்தங்கள்[தொகு]
பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.
நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்=[தொகு]
1.உச்சிட்ட கணபதி
2.உத்தண்ட கணபதி
3.ஊர்த்துவ கணபதி
4.ஏகதந்த கணபதி
5.ஏகாட்சர கணபதி
6.ஏரம்ப கணபதி
7.சக்தி கணபதி
8.சங்கடஹர கணபதி
9.சிங்க கணபதி
10.சித்தி கணபதி
11.சிருஷ்டி கணபதி
12.தருண கணபதி
13.திரயாக்ஷர கணபதி
14.துண்டி கணபதி
15.துர்க்கா கணபதி
16.துவிமுக கணபதி
17.துவிஜ கணபதி
18.நிருத்த கணபதி
19.பக்தி கணபதி
20.பால கணபதி
21.மஹா கணபதி
22.மும்முக கணபதி
23.யோக கணபதி
24.ரணமோசன கணபதி
25.லட்சுமி கணபதி
26.வர கணபதி
27.விக்ன கணபதி
28.விஜய கணபதி
29.வீர கணபதி
30.ஹரித்திரா கணபதி
31.க்ஷிப்ர கணபதி
32.க்ஷிப்ரபிரசாத கணபதி
விநாயக சதுர்த்தி[தொகு]
விநாயக சதுர்த்தி குறித்த நிகழ்படம்
வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
தமிழ் நாட்டின் சிறப்பு[தொகு]
மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்.
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.