வியாழன், 22 ஏப்ரல், 2021

எங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் தரக்கூடிய அஷ்டலட்சுமி

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.
1. ஆதிலட்சுமி
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கீரிடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு
 கரங்கள் உள்ளன.
2. சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தை செல்வத்தை வழங்குபவள். இவ்வம்மை ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கிறாள். 
3. கஜலட்சுமி 
இவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். 
4. தனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது பொன்னினைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம்; நம்மில் பலரால் விரும்பப்படுவது. இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். 
5. தான்யலட்சுமி 
இவ்வம்மையே எங்கும் செழுமை நிறைந்திருக்கக் காரணம் ஆவாள். இவளின் அருளாலே உலகில் பசிப்பிணி நீங்குகிறது. இவள் தானியங்கள், உணவுகள், ஊட்டச்சத்துகள், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிபதி. இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள். 
6. விஜயலட்சுமி 
இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். நம் வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். இவ்வம்மையின் அருட்பார்வையாலே நம்மால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். வெற்றி, தைரியம், நம்பிக்கை, பயமின்மை ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.
7. வீரலட்சுமி
இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி
 இவளுக்கு உண்டு.
8. வித்யாலட்சுமி
இவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருளுவாள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 14.04.21

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ் பிலவ ஆண்டு.14.04.2021 இன்று  புதன் கிழமை பிறந்தது.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 1 ஏப்ரல், 2021

பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.21

யாழ் நவற்கிரி அச்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா ( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப
உறவுகளுடன்,
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,சகோதரர்கள் மருமகள் மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், மருமக்கள் மச்சான் மச்சாள் மார்சகலன் சகலி மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்களும் உற்றார் உறவினர்கள்,
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்,சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து .இவ்வுறவை
இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
உங்களை நாம் பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன் வாழ கற்று கொள்வோம்
உறுதிமொழி ஏற்றுவாழ
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>









nilavarai.net