சனி, 22 ஜனவரி, 2022

நுவரெலியாவில் பஞ்ச லிங்கங்களை பாதுகாக்கும் ஐந்து தலை நாகங்கள்

உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அது மட்டும் இல்லை அதிசயம் எங்கு இருக்கின்றதோ.. அங்கு தான் பல மர்மங்களும் புதைந்து கிடக்கும். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் 
இலங்கையில்
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் டன்சினன் தூவான கங்கை நீர்வீழ்ச்சி. நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா என்ற இடத்தில் டன்சினன் தூவான கங்கை அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சியோடு கோவிலொன்றும் இணைந்தே காணப்படுகின்றது.
அக்கோவிலின் பெயர் ஸ்ரீ மீனாட்சி சிவாலயம். இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்சியின் அழகை ரசித்துவிட்டு கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு செல்வர். இக்கோவில், நீர்வீழ்ச்சியில் பல அதிசயங்களும் மர்மங்களும் நிகழ இங்கு அமைந்திருக்கும் இந்த கோவில் தான் முக்கிய காரணம். கோயிலும் நீர்வீழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றது.
குறிப்பாக இந் நீர்வீழ்ச்சியிலிருந்து ஐந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து லிங்கங்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடி வந்து பாதுகாப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கோவில் அச்சகர் இல்லாத போது அர்ச்சகர் உருவில் வேறொரு
நபர் அர்ச்சகர் உருவில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கூறியதாகவும் அந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். இங்கு பல ஆயிர கணக்கான மக்கள் பார்வையிட வருவதாகவும் அது மட்டும் இன்றி இங்கு செல்வதாக இருந்தால் பல கட்டுபாடுகளும் இருக்கின்றதாம்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





ஞாயிறு, 9 ஜனவரி, 2022

தைப் பொங்கல் 2022ம் ஆண்டு வைக்க உகந்த நேரம் இது தான்

 நாம் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி அழைக்கப்படுகிறது.தைப் பொங்கல் இறை வழிபாடு மட்டுமில்லாமல் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விழா.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி அழைக்கப்படுகிறது.
தைப் பொங்கல் இறை வழிபாடு மட்டுமில்லாமல் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விழா.
தைப் பொங்கல் 2022 எப்போது? ஜனவரி 13 (மார்கழி 29) வியாழக் கிழமை – போகி பண்டிகை,ஜனவரி 14 (தை 1) வெள்ளிக் கிழமை – தைப் பொங்கல்,ஜனவரி 15 (தை 2) சனி கிழமை- மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம்,ஜனவரி 16 (தை 3) ஞாயிறு – கனுமாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்.
மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட 
வேண்டும்?பொங்கல் 
வைக்க நல்ல நேரம்:தை 1ம் தேதி வெள்ளிக்கிழமை எனும் மகாலட்சுமியின் அம்சமான நாளில் வருகிறது.அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுப ஹோரைகள் இருப்பதோடு, அன்று வரக்கூடிய நல்ல நேரமான காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10 மணி வரி சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும்.போகி பண்டிகை 2022 ஏன் சிறப்பாக 
கொண்டாடப்பட வேண்டும்?
சூரிய வழிபாடு:சூரியன் மகர ராசிக்குள் பிரவேசித்துச் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை தை மாதம் என குறிப்பிடப்படுகிறது. இதனால் தான் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது.தைப் பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு தன் ஒளியால் உதவிய, நல்ல கால சூழலை ஏற்படுத்திக் 
கொடுத்த சூரிய
பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் பகல் பொழுது அதிகரிக்கக்கூடிய காலம் தொடங்கும்.
தை பொங்கல் 2022 : மகர சங்கராந்தி கொண்டாடுவதன் ஆன்மிக அறிவியல் காரணம் தெரியுமா?சூரிய பகவானை வழிபடும் பண்டிகை என்பதோடு, விவசாயத்திற்கு உதவிய மாடுகள், கால்நடைகளைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல், தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் 
கொண்டாடப்படுகிறது. 
அதுமட்டுமல்லாமல் பொங்கலுக்கு முந்தைய தினத்தில் பழையன கலைந்து, புதியதைப் புகுத்தும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.சங்கராந்தியின் பெருமை:12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படும் கும்பமேளா, மகர சங்கராந்தி தினத்தில்
 தான் துவங்குகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



nilavarai.net