வியாழன், 26 மார்ச், 2015

நவக்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை

நவக்கிரி கிராமத்தில்  விற்றிருக்கும் நவக்கிரி ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை இன்று 26.03.15   .
 பக்தர்கள்  கூட்டத்துடம்  எம் பெருமானின்   ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை  மிகச்சிறப்பாக நடை பெற்றது .
  நிழல் படங்கள் . இணைப்பு 






இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய கொடியிறக்கம் .

நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்து அமைந்திருக்கும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பதின்ஐந்தம் நாள்   
 கொடியிறக்கம் 25.03.15 இன்று. மெய் அடியார்கள்குட்டத்துடம்   இடம்பெற்றது   எம் பெருமானின்   கொடியிறக்க திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது .
  நிழல் படங்கள் ..காணொளிகள்   இணைப்பு ....






வெள்ளி, 13 மார்ச், 2015

வேண்டும் வரம் கொடுக்கும் அனுமந்தை அங்காள பரமேஸ்வரி அம்மன்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது அனுமந்தை ஊராட்சி. இந்த கிராமம் அழகிய இயற்கை எழிலோடும், செல்வச்செழிப்போடும் உள்ளது.  இந்த கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில். இந்தக்கோயில் சுமார் நூறு ஆண்டுக்கு முன்  கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கென்று தனிசிறப்பு உள்ளது. இங்குவந்து அம்மனை வேண்டிவணங்கினால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும். இங்கு வந்து நாம்  எதை நினைத்து வணங்கினாலும் அதை வரமாக கொடுக்கும் சக்தி அம்மனுக்கு உள்ளது. வீடு கட்டுதல், நிலம் வாங்குதல், திருமணம் தடை, வியாபாரம்  செழித்தல் போன்ற பல்வேறு வரங்கள் வேண்டி பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச்செல்வது சிறப்பம்சம்.

இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். கொடியேற்ற நாள்முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு திருவிழா நடக்கும். இதில் 8ம் நாள்  திருவிழாவான காளியம்மன் கைகளில் முறம் ஏந்தி ஊர்வலம் வருவதாலும், மறுநாள் 9 ம் நாள் அம்மன் தேர் வீதி உலாவும், சுடுகாட்டில் அம்மன் பாவாடை  ராயன் சகிதத்துடன் வள்ளாலராஜன் கோட்டை அழித்தல் மற்றும் சாசாசனியின் குடலை உருவுதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மயானக்கொள்ளை  விழாவும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கு அடுத்த நாள் இரவு தெப்பல் திருவிழாவும் நடக்கும் இங்கு நடைபெறும் தேர்திருவிழாவில் 8ம் நாள் உதிரவாய்  துடைத்தல் என்ற திருவிழாவும் நடக்கின்றது. 

இத்திருவிழாவைக்காண வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை  அன்று இரவு அக்னி சட்டி ஊர்வல திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த அக்னி சட்டி விழாவில் விழுப்புரம், புதுவை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய  மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி அம்மனை வணங்குகின்றனர். இத்திருவிழாக்களை பரம்பரை  தர்மகத்தா சின்னசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் கலைவாணிராஜேந்திரன், கூட்டுறவு நிலவளவங்கிதலைவர் ரவிவர்மன் ஆகியோர் தலைமையேற்று  நடத்துகின்றனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>  



பாவ வினைகள் போக்கும் அமாவாசை புண்ணிய வழிபாடு

ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம். 

அந்தளவுக்கு விரதங்களும், வழிபாடுகளும், விழாக்களும், பண்டிகைகளும் இம்மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் 
பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’ என்றும் ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவார்கள். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது. 

அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது 
பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் 
வழிபாடுகள் செய்யலாம். புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா 
இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம் 
அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.

மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், சாஸ்திரத்தில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் இருக்கிறது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்கக் கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது. ஆகையால் அமாவாசையன்று புது காரியங்கள் தொடங்குவது, அட்வான்ஸ் கொடுப்பது, அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக 
சொல்லப்படுகிறது. புண்ணிய மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


அப்பா வயிரவர் கோவில் உபய நிகழ்வு

    
 நவற்கிரி மோகன்  குடும்பத்தினர்ரின் நேர்த்தியைய் வேண்டி அப்பா வயிரவர் கோவில்
 வயிரவர்   சூலம் (வார சூலை)  (பையிரவர்) உபய நிகழ்வு மிகவும் சிறப்பாக நடை பெற்றது 
  அதன்  நிழல்படங்கள் சூலத்தின் மகிமை பற்றிய  இணைப்பும் .
சூலம்(வார சூலை) என்பது என்ன? -
"""""""""""""""""""""""""""""
 நாம் பயன்படுத்தும்  நாட்காட்டிகளிலோ,பஞ்சாங்களிலோ ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு திசையில் ...சூலம் என போட்டியிருக்கும்.இதற்கு வாரசூலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.பெரும்பாலனவர்கள்ஒரு காரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் சூலம் உள்ளதா? என்பதை பார்த்து தான் காரிய முயற்சி செய்வார்கள். இதற்கான அடிப்படை காரணம் என்னவெனில்,இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்.அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது. சிவனின் சூலம்.., ஞாயிறு = மேற்கு. திங்கள் = கிழக்கு. செவ்வாய்= வடக்கு. புதன்= வடக்கு. வியாழன்= தெற்கு. வெள்ளி= மேற்கு. சனி= கிழக்கு. சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம் என்பதே பொருள் ஆகும்.













இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 12 மார்ச், 2015

அதன் நிழல்படங்கள் காணொளி,இணைப்பு..

இன்று மிகவும் சிறப்பாகநடை பொற்றது
அதன்  நிழல்படங்கள் காணொளி,இணைப்பு..
 
 





















































 

nilavarai.net