விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது அனுமந்தை ஊராட்சி. இந்த கிராமம் அழகிய இயற்கை எழிலோடும், செல்வச்செழிப்போடும் உள்ளது. இந்த கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில். இந்தக்கோயில் சுமார் நூறு ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கென்று தனிசிறப்பு உள்ளது. இங்குவந்து அம்மனை வேண்டிவணங்கினால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும். இங்கு வந்து நாம் எதை நினைத்து வணங்கினாலும் அதை வரமாக கொடுக்கும் சக்தி அம்மனுக்கு உள்ளது. வீடு கட்டுதல், நிலம் வாங்குதல், திருமணம் தடை, வியாபாரம் செழித்தல் போன்ற பல்வேறு வரங்கள் வேண்டி பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச்செல்வது சிறப்பம்சம்.
இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். கொடியேற்ற நாள்முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு திருவிழா நடக்கும். இதில் 8ம் நாள் திருவிழாவான காளியம்மன் கைகளில் முறம் ஏந்தி ஊர்வலம் வருவதாலும், மறுநாள் 9 ம் நாள் அம்மன் தேர் வீதி உலாவும், சுடுகாட்டில் அம்மன் பாவாடை ராயன் சகிதத்துடன் வள்ளாலராஜன் கோட்டை அழித்தல் மற்றும் சாசாசனியின் குடலை உருவுதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மயானக்கொள்ளை விழாவும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கு அடுத்த நாள் இரவு தெப்பல் திருவிழாவும் நடக்கும் இங்கு நடைபெறும் தேர்திருவிழாவில் 8ம் நாள் உதிரவாய் துடைத்தல் என்ற திருவிழாவும் நடக்கின்றது.
இத்திருவிழாவைக்காண வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு அக்னி சட்டி ஊர்வல திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த அக்னி சட்டி விழாவில் விழுப்புரம், புதுவை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி அம்மனை வணங்குகின்றனர். இத்திருவிழாக்களை பரம்பரை தர்மகத்தா சின்னசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் கலைவாணிராஜேந்திரன், கூட்டுறவு நிலவளவங்கிதலைவர் ரவிவர்மன் ஆகியோர் தலைமையேற்று நடத்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக