சனி, 17 ஜூலை, 2021

தமிழர்களின் வாழ்வியலில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்


இவ்வருடத்திற்கான ஆடிப்பிறப்பு இன்றாகும். ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும், இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.
முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.
அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள்.
குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காகவே.ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறா
ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது.தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





சனி, 10 ஜூலை, 2021

உங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெற கடக ராசியினரின் பரிகாரங்கள்

ஒவ்வொருவரும் அவர்கள் பிறக்கின்ற நேரத்தில் அன்றைய நாள், நேரம், அன்றைய தினத்தில் கிரகங்களின் நிலை ஆகியவற்றை கொண்டு ஒரு மனிதனின் ராசி கணிக்கப்படுகிறது. அந்த 
வகையில் 12 ராசிகளில்
நான்காவதாக வரும் ராசி “கடகம்” ஆகும். இந்த கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.“கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள்
“நண்டு” ஆகும். நண்டு பொதுவாக நீரில் வசிக்கும் ஓரு உயிரனமாகும். பஞ்சபூதத்தில் நீரை ஆளும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். எனவே சந்திர பகவானின் “சொந்த” ராசியாக கடக ராசி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. சந்திர பகவானை மனோகாரகன் என்றும் கூறுவர். ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாக சந்திர
பகவான் இருக்கிறார். கடக ராசியினர் தங்கள் வாழ்வில் நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நன்மை பயக்கும்.கடக ராசிக்குரிய நவகிரக நாயகன் சந்திர பகவான் ஆவார். எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு
பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருவது அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை 
நிரம்பச் செய்யும்.
சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால்
உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலும், விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியும் அமைப்பது சிறந்தது. கோயில்களில் இருக்கும் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அவ்வப்போது அரிசி பொரியை இரையாக அளித்து வருவதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 2 ஜூலை, 2021

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பற்றி தகவல்

  வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இந்த முறை பக்தர்களின் பங்குபற்றல்இன்றி .02-07-2021. இடம்பெறவுள்ளது
மேலும் கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு இதன்படி, எதிர்வரும் 10.07-2021. ஆம் திகதி முதல் 23-07-2021.
 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக
 ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நடனக்குழுவின் வருடாந்த உற்சவ 
ஊர்வலத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 



 

சனி, 22 மே, 2021

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தியாகராஜா.தர்மா 23-05-21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா)..தம்பதியினரின் திருமண நாள் 23-05-2021.இன்று 40வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினர் தங்கள் இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினர்அன்பு அம்மா பிள்ளைகள் மாமி ,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ்க 
வாழ்நலம் வரம் பேற்று
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி    நல்லறம் போற்ற வாழ்வீர் திருமண தினம் என்பது நம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்த வாழ்வின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். எங்கள் பிறந்த நாளை போலவே வருடா வருடம் திருமண நாளும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிலைத்து நிற்கும்.அத்தகைய முக்கியத்துவம் 
வாய்ந்த இந்த,
திருமண நாளிலே நம் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் நம் குடும்பத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் நம் கல்யாண நாளிலே வருகை தந்து மணமக்களை வாழ்த்தி  மகிழ்விப்பர்.
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து தம்பதியினர் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் நவற்கிரி அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்பாள் சுவிஸ் முருகன் -அம்பாள்-சிவன் மாதா இறை அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா,
சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்நவற்கிரி. .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் இணையங்களும் மற்றும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் 
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







ஞாயிறு, 9 மே, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி .லோவிதன் யஸ்மிதா. 09.05.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் ஆறாவது  பிறந்த நாள் .09.05.2021..இன்று .தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினார்  இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன..
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம் 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக 
அமைய வேண்டி இந்த பிறந்த நாளில்
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த எங்கள்  வெண்ணிலா  வாழிய பல்லாண்டு பல்லாண்டு
காலம் வாழ வாழ் த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>













வியாழன், 22 ஏப்ரல், 2021

எங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் தரக்கூடிய அஷ்டலட்சுமி

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.
1. ஆதிலட்சுமி
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கீரிடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு
 கரங்கள் உள்ளன.
2. சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தை செல்வத்தை வழங்குபவள். இவ்வம்மை ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கிறாள். 
3. கஜலட்சுமி 
இவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். 
4. தனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது பொன்னினைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம்; நம்மில் பலரால் விரும்பப்படுவது. இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். 
5. தான்யலட்சுமி 
இவ்வம்மையே எங்கும் செழுமை நிறைந்திருக்கக் காரணம் ஆவாள். இவளின் அருளாலே உலகில் பசிப்பிணி நீங்குகிறது. இவள் தானியங்கள், உணவுகள், ஊட்டச்சத்துகள், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிபதி. இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள். 
6. விஜயலட்சுமி 
இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். நம் வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். இவ்வம்மையின் அருட்பார்வையாலே நம்மால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். வெற்றி, தைரியம், நம்பிக்கை, பயமின்மை ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.
7. வீரலட்சுமி
இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி
 இவளுக்கு உண்டு.
8. வித்யாலட்சுமி
இவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருளுவாள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 14.04.21

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ் பிலவ ஆண்டு.14.04.2021 இன்று  புதன் கிழமை பிறந்தது.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 1 ஏப்ரல், 2021

பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.21

யாழ் நவற்கிரி அச்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா ( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப
உறவுகளுடன்,
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,சகோதரர்கள் மருமகள் மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், மருமக்கள் மச்சான் மச்சாள் மார்சகலன் சகலி மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்களும் உற்றார் உறவினர்கள்,
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்,சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து .இவ்வுறவை
இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
உங்களை நாம் பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன் வாழ கற்று கொள்வோம்
உறுதிமொழி ஏற்றுவாழ
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>









ஞாயிறு, 21 மார்ச், 2021

நவ ற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் சாந்தி மடை நிகழ்வு 21-03-2021

யாழ்  நவ ற்கிரி கிராமத்தில்  விற்றிருக்கும் நவ ற்கிரி ஸ்ரீ  நரசிங்க வைரவர்சாந்தி   மடை நிகழ்வு இன்று 21.03.2021   .
 ஞாயிற்றுக்கிழமை  பக்தர்கள்  கூட்டத்துடம்  எம் பெருமான்   ஸ்ரீ  நரசிங்க வைரவர்  சாந்தி மடை  மிகச்சிறப்பாக நடை பெற்றது .
     நிழல் படங்கள் . இணைப்பு ..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 6 மார்ச், 2021

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய 1ம் பகல் திருவிழா கொடியேற்றம் 06.03.2021

இலங்கைத்திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்.
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
கொடி ஏற்றந்திருவிழா 06,03,2021. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>














nilavarai.net