சனி, 17 ஜூலை, 2021

தமிழர்களின் வாழ்வியலில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்


இவ்வருடத்திற்கான ஆடிப்பிறப்பு இன்றாகும். ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும், இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.
முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.
அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள்.
குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காகவே.ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறா
ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது.தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





சனி, 10 ஜூலை, 2021

உங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெற கடக ராசியினரின் பரிகாரங்கள்

ஒவ்வொருவரும் அவர்கள் பிறக்கின்ற நேரத்தில் அன்றைய நாள், நேரம், அன்றைய தினத்தில் கிரகங்களின் நிலை ஆகியவற்றை கொண்டு ஒரு மனிதனின் ராசி கணிக்கப்படுகிறது. அந்த 
வகையில் 12 ராசிகளில்
நான்காவதாக வரும் ராசி “கடகம்” ஆகும். இந்த கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.“கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள்
“நண்டு” ஆகும். நண்டு பொதுவாக நீரில் வசிக்கும் ஓரு உயிரனமாகும். பஞ்சபூதத்தில் நீரை ஆளும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். எனவே சந்திர பகவானின் “சொந்த” ராசியாக கடக ராசி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. சந்திர பகவானை மனோகாரகன் என்றும் கூறுவர். ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாக சந்திர
பகவான் இருக்கிறார். கடக ராசியினர் தங்கள் வாழ்வில் நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நன்மை பயக்கும்.கடக ராசிக்குரிய நவகிரக நாயகன் சந்திர பகவான் ஆவார். எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு
பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருவது அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை 
நிரம்பச் செய்யும்.
சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால்
உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலும், விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியும் அமைப்பது சிறந்தது. கோயில்களில் இருக்கும் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அவ்வப்போது அரிசி பொரியை இரையாக அளித்து வருவதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 2 ஜூலை, 2021

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பற்றி தகவல்

  வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இந்த முறை பக்தர்களின் பங்குபற்றல்இன்றி .02-07-2021. இடம்பெறவுள்ளது
மேலும் கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு இதன்படி, எதிர்வரும் 10.07-2021. ஆம் திகதி முதல் 23-07-2021.
 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக
 ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நடனக்குழுவின் வருடாந்த உற்சவ 
ஊர்வலத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 



 

nilavarai.net