வெள்ளி, 30 டிசம்பர், 2022

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் 30.12.22

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின்  பிறந்தநாள்.30.12. 2022 இன்று தனது இல்லத்தில்  உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅன்பு அம்மா அன்பு அக்கா 
அப்‌பம்மா அம்மம்மா ஐயா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார்  தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள்  இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு
 நிறைந்த வாழ்வோடு
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன …
வாழ்க வளமுடன்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 9 நவம்பர், 2022

பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 09.11.2022

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 09.11.2022. இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் 
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் 
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ் சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள். உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்...என  குடும்பஉறவுகள் உற்றார் உறவினர் நண்பர்கள் . பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 22 மே, 2022

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தியாகராஜா.23.05.2022

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)தம்பதியினரின்
திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடினார்கள்
காணும் தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர்
உறவுகள் சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு
இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை
கொடுக்கிறீர்கள்..! இந்த
திருமண நாள்
மகிழ்ச்சியான நாளாக
அமைய என் இனிய
திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றோம்
மணமக்களுக்கு எங்கள் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் மறுவன்புலவீரபத்திரர் .புத்தூர் அம்பாள் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் ராஜா& தர்மா ,திருமணநாள் வாழ்த்து >>>








வியாழன், 31 மார்ச், 2022

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.துரைராஜா தியாகராஜா 01.04.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா
( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2022.இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடினார் இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்நவற்கிரி ,அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்அம்பாள்  சுவிஸ் சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்பாள் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
















செவ்வாய், 22 மார்ச், 2022

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடி ஏற்றம் .23.03.22

இலங்கைத்திரு நாட்டில் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே சிறப்புற அமைந்த இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்,

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-

கொடி ஏற்றந்திருவிழா 23-03-2022. இன்று புதன்கிழமை ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள்,

கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும், அடுத்தமாதம்-02 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்கு மாங்கனி உற்சவமும், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05

மணிக்குத் திருவேட்டை உற்சவமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்.
புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாகவும்  மேலும் 
ஆலய பரிபாலனசபையினர்  குறிப்பிட்டனர்
இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலங்களில் தினமும் பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் எம்பெருமானை வழிபட்டு பேரருளைப் பெற்று, உலகம்வாழ் அடியவர்கள் அனைவரும் பெருவாழ்வு வாழ எம்பெருமான் கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்துணைபுரிவர் 
ஒம்காம் கணபதி நாம தேய நமக
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் எம் பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்களுக்கு 
எம்.பெருமானின் தரிசனத்தை உங்களுக்கு வழங்கும் நோக்கமே இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு எம் பெருமான்அருள்
புரிவாராக .ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை
.திருவிழா நிகழ்வின் நிழல் படங்கள் இணைப்பு ..

.. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




சனி, 22 ஜனவரி, 2022

நுவரெலியாவில் பஞ்ச லிங்கங்களை பாதுகாக்கும் ஐந்து தலை நாகங்கள்

உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அது மட்டும் இல்லை அதிசயம் எங்கு இருக்கின்றதோ.. அங்கு தான் பல மர்மங்களும் புதைந்து கிடக்கும். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் 
இலங்கையில்
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் டன்சினன் தூவான கங்கை நீர்வீழ்ச்சி. நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா என்ற இடத்தில் டன்சினன் தூவான கங்கை அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சியோடு கோவிலொன்றும் இணைந்தே காணப்படுகின்றது.
அக்கோவிலின் பெயர் ஸ்ரீ மீனாட்சி சிவாலயம். இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்சியின் அழகை ரசித்துவிட்டு கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு செல்வர். இக்கோவில், நீர்வீழ்ச்சியில் பல அதிசயங்களும் மர்மங்களும் நிகழ இங்கு அமைந்திருக்கும் இந்த கோவில் தான் முக்கிய காரணம். கோயிலும் நீர்வீழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றது.
குறிப்பாக இந் நீர்வீழ்ச்சியிலிருந்து ஐந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து லிங்கங்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடி வந்து பாதுகாப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கோவில் அச்சகர் இல்லாத போது அர்ச்சகர் உருவில் வேறொரு
நபர் அர்ச்சகர் உருவில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கூறியதாகவும் அந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். இங்கு பல ஆயிர கணக்கான மக்கள் பார்வையிட வருவதாகவும் அது மட்டும் இன்றி இங்கு செல்வதாக இருந்தால் பல கட்டுபாடுகளும் இருக்கின்றதாம்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





ஞாயிறு, 9 ஜனவரி, 2022

தைப் பொங்கல் 2022ம் ஆண்டு வைக்க உகந்த நேரம் இது தான்

 நாம் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி அழைக்கப்படுகிறது.தைப் பொங்கல் இறை வழிபாடு மட்டுமில்லாமல் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விழா.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி அழைக்கப்படுகிறது.
தைப் பொங்கல் இறை வழிபாடு மட்டுமில்லாமல் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விழா.
தைப் பொங்கல் 2022 எப்போது? ஜனவரி 13 (மார்கழி 29) வியாழக் கிழமை – போகி பண்டிகை,ஜனவரி 14 (தை 1) வெள்ளிக் கிழமை – தைப் பொங்கல்,ஜனவரி 15 (தை 2) சனி கிழமை- மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம்,ஜனவரி 16 (தை 3) ஞாயிறு – கனுமாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்.
மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட 
வேண்டும்?பொங்கல் 
வைக்க நல்ல நேரம்:தை 1ம் தேதி வெள்ளிக்கிழமை எனும் மகாலட்சுமியின் அம்சமான நாளில் வருகிறது.அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுப ஹோரைகள் இருப்பதோடு, அன்று வரக்கூடிய நல்ல நேரமான காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10 மணி வரி சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும்.போகி பண்டிகை 2022 ஏன் சிறப்பாக 
கொண்டாடப்பட வேண்டும்?
சூரிய வழிபாடு:சூரியன் மகர ராசிக்குள் பிரவேசித்துச் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை தை மாதம் என குறிப்பிடப்படுகிறது. இதனால் தான் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது.தைப் பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு தன் ஒளியால் உதவிய, நல்ல கால சூழலை ஏற்படுத்திக் 
கொடுத்த சூரிய
பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் பகல் பொழுது அதிகரிக்கக்கூடிய காலம் தொடங்கும்.
தை பொங்கல் 2022 : மகர சங்கராந்தி கொண்டாடுவதன் ஆன்மிக அறிவியல் காரணம் தெரியுமா?சூரிய பகவானை வழிபடும் பண்டிகை என்பதோடு, விவசாயத்திற்கு உதவிய மாடுகள், கால்நடைகளைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல், தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் 
கொண்டாடப்படுகிறது. 
அதுமட்டுமல்லாமல் பொங்கலுக்கு முந்தைய தினத்தில் பழையன கலைந்து, புதியதைப் புகுத்தும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.சங்கராந்தியின் பெருமை:12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படும் கும்பமேளா, மகர சங்கராந்தி தினத்தில்
 தான் துவங்குகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



nilavarai.net