இலங்கைத்திரு நாட்டில் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே சிறப்புற அமைந்த இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்,
நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
கொடி ஏற்றந்திருவிழா 23-03-2022. இன்று புதன்கிழமை ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள்,
கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும், அடுத்தமாதம்-02 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்கு மாங்கனி உற்சவமும், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05
மணிக்குத் திருவேட்டை உற்சவமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்.
புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாகவும் மேலும்
ஆலய பரிபாலனசபையினர் குறிப்பிட்டனர்
இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலங்களில் தினமும் பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் எம்பெருமானை வழிபட்டு பேரருளைப் பெற்று, உலகம்வாழ் அடியவர்கள் அனைவரும் பெருவாழ்வு வாழ எம்பெருமான் கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்துணைபுரிவர்
ஒம்காம் கணபதி நாம தேய நமக
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் எம் பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்களுக்கு
எம்.பெருமானின் தரிசனத்தை உங்களுக்கு வழங்கும் நோக்கமே இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு எம் பெருமான்அருள்
புரிவாராக .ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை
.திருவிழா நிகழ்வின் நிழல் படங்கள் இணைப்பு ..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக