வியாழன், 31 மார்ச், 2022

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.துரைராஜா தியாகராஜா 01.04.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா
( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2022.இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடினார் இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்நவற்கிரி ,அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்அம்பாள்  சுவிஸ் சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்பாள் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
















செவ்வாய், 22 மார்ச், 2022

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடி ஏற்றம் .23.03.22

இலங்கைத்திரு நாட்டில் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே சிறப்புற அமைந்த இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்,

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-

கொடி ஏற்றந்திருவிழா 23-03-2022. இன்று புதன்கிழமை ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள்,

கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும், அடுத்தமாதம்-02 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்கு மாங்கனி உற்சவமும், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05

மணிக்குத் திருவேட்டை உற்சவமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்.
புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாகவும்  மேலும் 
ஆலய பரிபாலனசபையினர்  குறிப்பிட்டனர்
இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலங்களில் தினமும் பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் எம்பெருமானை வழிபட்டு பேரருளைப் பெற்று, உலகம்வாழ் அடியவர்கள் அனைவரும் பெருவாழ்வு வாழ எம்பெருமான் கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்துணைபுரிவர் 
ஒம்காம் கணபதி நாம தேய நமக
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் எம் பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்களுக்கு 
எம்.பெருமானின் தரிசனத்தை உங்களுக்கு வழங்கும் நோக்கமே இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு எம் பெருமான்அருள்
புரிவாராக .ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை
.திருவிழா நிகழ்வின் நிழல் படங்கள் இணைப்பு ..

.. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




nilavarai.net