வெள்ளி, 27 டிசம்பர், 2013
வெள்ளி, 29 நவம்பர், 2013
ஐயப்ப விரதத்தின் ரகசியம்
ஐயப்பனை தரிசிக்கும் அனுபவத்தை போலவே, அவருடைய அவதார திருக்கதையும் மெய்சிலிர்க்கச் செய்யும். தேவர்களை மிகவும் கொடுமை படுத்தி வந்த
பிரம்மாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்தார். அவருடைய அழகில் சிவபெருமான் மயங்கினார். அதன் விளைவாக, அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே அவர் அவதரித்தார். எனவே, கழுத்தில்
மணி மாலையை அடை யாளமாக இட்டு காட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றனர். இந்த நிலைமையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பந்தள நாட்டு பகுதியை ஆண்டு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கழுத்தில் மணியுடன் கிடந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார்.
அவருக்கு அதுவரை குழந்தை கிடையாது. எனவே, கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், ராணிக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்ற மகன் என்ப தால் பாசம் அதிகமானது. அந்த பாசத்தை பயன்படுத்திய அமைச்சர் துர்போதனை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக தலை வலிப்பது போல நாடகமாடிய
ராணி, புலிப்பால் கொண்டு வருமாறு 12 வயது பாலகன் மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பினார். காட்டுக்கு செல்லும்போது பம்பை ஆற்றில் மகிஷாசுரன் தங்கையான மகிஷி தடுத்து நிறுத்த கடும் போர் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். ஒரு அழகிய பெண்ணாக சாப விமோசனம் பெற்றாள்.
விமோசனம் பெற்றதும் மணிகண்டனின் அழகிய உருவத்தை கண்டு மணம் முடிக்க ஆவல் கொண்டாள். ஆனால், மணிகண்டனோ, ‘நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி. ஐயப்பன் அவதாரமாக
அவதரித்துள்ள என்னை நாடி எப்போது கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கின்றனரோ, அன்று நான் உ ன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக இரு’ என அருள் பாலித்தார். பின்னர், ஏராளமான புலிகளை திரட்டிக் கொண்டு நாடு திரும்பினார். அவரை அந்த
கோலத்தில் கண்ட ராணியும் மந்திரியும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜா ராஜசேகரனும் உண்மையை உணர்ந்து மணிகண்டனை வணங்கினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்கேயே தங்க மணிகண்டன் சம்ம தித்தார்.
அவர் அம்பு எய்த இடத்தில் பம்பை நதிக்கரையில் மன்னன் ராஜசேகரன் கோவில் எழுப்பினான். அதில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கி ரகத்தில் ஐயப்பனாக மணிகண்டன் ஐக்கியமானார். ஐயப்பனை வஞ்சகமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும் 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. கடைசியாக
ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் விளைவே இன்று வரை ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கும் முறை தொடருகிறது. 41 நாட்கள் என்பது ஒரு மண்டலமாக, (48 நாட்களாக) மாறி உள்ளது.
அரிக்கும் அரனுக்கும் மகனாக அரிகர புத்திரனாக பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி ஐயப்பனாக உயர்ந்த சபரிமலை நாயகன், ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஜோதி வடிவாய் இன்றும் காட்சியளித்து வருகிறார். —
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
திருத்தொண்டத்தொகை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஏழாம் திருமுறை)
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
393 தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 7.39.1
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
394 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் 7.39.2
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
395 *மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் 7.39.3
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 7.48.4
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் 7.48.5
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
*நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
#அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
398 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே 7.48.6
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
399 பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் 7.48.7
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
400 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த 7.48.8
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
401 கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் 7.48.9
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
402 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் 7.48.10
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
403 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் 7.48.11
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.
திருச்சிற்றம்பலம்
இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார்
திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத்
தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது
தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை
உள்ளத்தால் வணங்கி "இவர்களுக்குநானடியே"னாகும்படி
பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் "தில்லைவாழ்
பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்
அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி
எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.
திருஞானசம்பந்தரின் தாக்கம்!
கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!
.திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!
ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.
"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''
இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.
"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''
தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம்
சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.
"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே'
'
இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்
.
"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''
÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும்
பொது
பாடல் எண் : 1
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.
பாடல் எண் : 2
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
இலை - இலைத் தன்மை; கூர்மை. வேல் - படைக்கலப் பொது; இங்கு, மழுவைக் குறித்தது.
கலை மலிந்த சீர், நூல்களில் பெரிதும் காணப்படுகின்ற புகழ், `திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி, கண்ணப்பதேவர் திருமறம்` முதலாக பல நூல்களினும் கண்ணப்பர் வரலாறு சிறந்தெடுத்துக் கூறப்படுதல் அறிக.
மலை மலிந்த - மலைத் தன்மை (பெருமையும், வலிமையும்) நிறைந்த. எஞ்சாத - தொண்டினை முட்டாது செய்த. `மங்கை` என்பது `மங்கலம்` என்பதன் மரூஉ. இஃது, ஊர்ப்பெயர்.
பாடல் எண் : 3
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
``மும்மை`` என்றது ``இருமை வகை தெரிந்து`` (குறள்-23) என்றாற்போல, `மூன்று` எனப் பொருள் தந்தது. மூன்றாவன: திருநீற்றுப்பூச்சு, கண்டிகைக் கலன், சடைமுடி என்பன.
செம்மையே போவான் - பிறழாது நின்ற உள்ளத்தோடே போவான்.
மெய்ம்மையே - இப்பிறப்புப் பிள்ளைமைப் பருவத்து விளையாட்டானேயன்றி, முற்பிறப்பில் வழிபட்ட தொடர்ச்சியானே. ``திருமேனி`` என்றது, இலிங்கத் திருமேனியை. வெகுண்டது, அவரது நிலையை அறியாமையால் என்க. எழுந்த - பல தவறுகளைச் செய்ய எழுந்து,
அங்ஙனமே செய்த. அம்மையான் அடி - வீடுபேற்றைத் தரும் முதல்வனது அடியையே பொருளாக அடைந்த. ``அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக் கொண்ட - செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார்`` (தி.12 சண்டேசுரர் புரா. 15) என்ற சேக்கிழாரது திருமொழியைக் காண்க.
பாடல் எண் : 4
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
திரு - இன்பம். `அது நிலைத்து நிற்றலாகிய செம்மையே உண்மைச் செம்மையாம்` எனக் கொண்டவர் திருநாவுக்கரசர் என்க. பிறப்பில் பெருமானாதலின், அத்தகைய செம்மையை யுடைய செம்பொருளாவான் சிவபெருமானே என்பது கருத்து. இஃது அவனது திருமேனிக் குறிப்பாலும்,
`சிவன்` என்னும் பெயராலுமே நன்கறியப்படும் என்பார், ``சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்`` (தி.4 ப. 112 பா.9) என அவர் ஓர் இடத்தில் அருளிச்செய்தார். ``திருநின்ற செம்மை`` என்பது, இந் நாயனார் அருளிச்செய்த தொடராதலை யறிக. (தி. 4 ப.8 பா.1)
பெருநம்பி - நம்பிகளுட் சிறந்தவர். அமைச்சராய் இருந்தும் அடியவர்க்கு அடிமை செய்தவர்; சைவப் பயிர்க்கு உளவாய் இருந்த களையைக் களைந்தவர்.
ஒருநம்பி - ஒப்பற்ற நம்பி; இறைவனது திருவருளை ஆசிரியராலே அடைந்தவர். சாத்த மங்கை, ஊர்ப்பெயர். அருநம்பி - அரிய செயலைச் செய்த நம்பி; நீரால் திரு விளக்கை ஒருநாள் ஒருபொழுதன்றி, எந்நாளும் எப்பொழுதும் இட்டவர்.
பாடல் எண் : 5
வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
வம்பு அறா வரிவண்டு - நறுமணத்தை விட்டுப் போகாத, வரிகளையுடைய வண்டுகள். `வண்டிற்கு` என நான்காவது விரிக்க. `நாறுமாறு மலரும் மலர்` என இயையும். `மலர்க்கொன்றை` என்றதனை, `கொன்றை மலர்` என மாற்றியுரைக்க. சிவபிரான் ஒருவனுக்கே உரிய சிறப்பு மாலையாகலின், ``நற்கொன்றை`` என்று அருளினார். ``கைச்சிறு மறியவன் கழலலாற்பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன்`` (தி.1 ப.77 பா.11) என அவர் ஓதியதனையே எடுத்தோதியருளினார் என்க. சிவபிரானால் ஆகமத்தைத் தமிழாற் செய்யத் தமிழகத்தில் வருவிக்கப்பெற்று அங்ஙனமே செய்தருளிய ஆசிரியராகலின், ``நம்பிரான்`` என்று அருளிச்செய்தார். நாட்டம் மிகு - பிறவியில் கண்ணில்லாதவராய் இருந்து, சமணர் முன்னே சிவபிரானது திருவருளாற் கண்பெற்று விளங்கியவர். அம்பர், ஊர்ப்பெயர்.
பாடல் எண் : 6
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
வார் - கச்சு. வனம் - அழகு. சீர் - சிறப்பு. கார்கொண்ட - மேகம் போன்ற. ஆர் - கூர்மை. களந்தை, ஊர்ப் பெயர்.
பாடல் எண் : 7
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
பொய்யடிமை யில்லாத புலவர், தொகையடியார். துஞ்சிய - இறைவன் திருவடியிற் சென்று தங்கிய. நாகை - நாகப்பட்டினம். வரிசிலை - கட்டப்பட்டு அமைந்த வில். கழல் - காலில் அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். `வரிஞ்சையர்கோன் கழற் சத்தி` என மாற்றி உரைக்க.
பாடல் எண் : 8
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
காப்புக் கொண்டிருந்த - தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை - நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற - திருநெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை - மயிலாப்பூர். அறை - அறுத்தல். ``நிறைக்கொண்ட`` முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று.
பாடல் எண் : 9
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
மடல் - இதழ். தார் - மாலை, அதள், தோல். ``ஆடி`` என்றது பெயர். அடல் - வெற்றி.
பாடல் எண் : 10
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
இத்திருப்பாடலில் அருளிச்செய்யப்பெற்றவர் அனைவரும், தொகையடியார்கள்.
பாடல் எண் : 11
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே.
பொழிப்புரை :
இல்லை
குறிப்புரை :
என்னவன் - எனக்கு உரியவன். காதலன் - மகன். `சடையன், இசைஞானி இவர்க்கு மகன்` என்க.
`காதலனும், கோனும் ஆகிய அத்தன்மையுடைய

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
ஆய கலைகள்.64.எவை தெரியுமா?
ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
அவர்தம் புகழ் பரப்பும் செய்திகள்"
அதாவது ஆன்மிக சம்பந்தமான... பதிவுகளைப் பகிர்வதற்காக மாத்திரமே
தொடங்கப்பட்டது.
வேறு தனிபபட்ட கவிதைகள்... செய்திகள்... பாடல்கள்...
துணுக்குகள்... வாழ்த்துக்கள்... இறை நிந்தனைகள்...
அரசியல்கள்... விளம்பரங்கள்... அறிவித்தல்கள்...
ஆகியவற்றை இத்தளத்திலே பகிர்வது முற்றாகத்
தடை செய்யப்பட்டுள்ளது.
கோயில் மணி ஓசை நாதமாக ரீங்காரிக்க ஆதரவளிக்குமாறு
அனைத்து உறவுகளையும் மிகவும் அன்பாகவும்... பணிவாகவும்..
தயவாகவும்... கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பிற்கும்... ஆதரவிற்கும்... மிக்க நன்றிகள்
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)